WhatsApp Image 2022-09-13 at 12.31.29 PM
CCM - CHRIST COVENANT MINISTRY - புதிய உடன்படிக்கையின் ஊழியம்

About us

யோவான் 8:32       சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
யோவான் 17 : 17       உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

சகோதரர் அப்போஸ்தலன் தாஸ்

கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட உங்களுடன் என்னையும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்

எனது ஆத்துமாவை ஆளும் ராஜாவாக ஆத்தும ரட்சகர் இயேசு கிறிஸ்துவை எனக்குள் தரிசிக்கும் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்ட பிற்ப்பாடு, வெளிப்பட்ட வெளிப்பாட்டையும் ,
நாமே தேவனுடைய ஆலையம் என்பதையும் , அந்த ஆலயத்திற்குள் தேவா ராஜ்யம் இருப்பதையும் , அந்த சீயோனை ஆட்சி செய்யும் ராஜ ஆத்துமாவின் ரட்சகராக செயல்படுவதையும் எனக்குள் அனுபவமாக்கிக்கொள்ள கிருபை பாராட்டிய கடவுளின் அநாதி அன்பை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே என்னுடைய நோக்கம்.

கிறிஸ்துவின் உடன்படிக்கை ஊழியத்தின் புரிதல்

இயேசுக்கிறிஸ்துவின் உடன்படிக்கையின் ஊடாக இரட்சிக்கப்பட்ட சகோதர சகோதரிகள் அவரின் உடன்படிக்கையை பூரணமாக (கலப்படம் இல்லாமல்கடைப்பிடிக்க உதவுவதே எமது முதன்மைப்பணி. (எபே 5:27,  2பேது 3:14, யாக்1:25)  கீழ்காணும் முக்கிய இரண்டு முறைமைகள் கிறிஸ்துவின் உடன்படிக்கையை கறைப்படுத்துகிறது.

1)  இயேசுக்கிறிஸ்துவினால் நிறைவு செய்யப்பட்ட நியாயப்பிரமாண முறைமைகளை மீண்டும் கடைப்பிடிப்போமாகில் அது உடன்படிக்கையை மீறும் குற்றத்தினால் விசுவாசிகளை மறுபடியும் சாபத்திற்குள் சிறைப்படுத்துகிறது. (கலா3:10 , எபே2:14-16 , கொலே2 14-15 , கலா2:15-21 ,  கலா3:10-14 , ரோம7:6 , ரோம10:14  , கலா518 , கலா5:4 , ………)

உதாரணமாக ; *விருத்தசேதனம்

 *தசமபாகம் (எபி 7:5)

 *பிரசங்கபீடத்தைஆசரிப்புக்கூடார முறைமையில்அனுசரித்தல் (பாதனிகளை கழட்டுதல்).
 *பாவ சாபங்கள் நீங்க உபவாச நாட்களை கடைப்பிடித்தல்.
 *மோசே ஆரோன் ஊழியங்களை கடைப்பிடித்தல்.

 *இடங்கள்,கட்டடங்களை பரிசுத்த ஸ்தலமாக மதித்தல்.

2)   பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்படாத அல்லது அனுசரிக்க கூடாத பாகால்களின் கொண்டாட்டங்களை துணிகரமாக கிறிஸ்தவ கொண்டாட்டங்களாக மாற்றி மறுபடி பிறந்தவர்களும் பாரம்பரியமாக அனுசரித்து வருவோமாகில் இது குருட்டாட்டத்திற்குள்ளும்கீழ்படியாமைக்குள்ளும் அடிமைப்படுத்தி விடும்(…………..) கலாத்தியர்  4  9.இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படிகலாத்தியர்  4  10.நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே.  

உதாரணமாக:

*கருப்பொருளில் இருந்து வாக்குத்தத்தங்களை பிரித்தெடுத்து மனிதர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் அனுசரிக்கப்படும் நாள்,கிழமைமாத,மற்றும் வருடப்பிறப்பு

*ரோமர் மற்றும் கிரேக்கர்களால் திணிக்கப்பட்ட கிறிஸ்மஸ்,ஈஸ்டர் கொண்டாட்டங்கள்.

*கிரேக்க நம்பிக்கையான மெழுகுதிரியை ஊதி அனைத்து பிறந்தநாள் கொண்டாடுதல். 

*பரிசுத்த வேதாகமத்தில் அனுமதிக்கப்படாத வீடுகுடிபுகுதல் முறைமை,வாகனப்பிரதிஷ்டை, பூப்புனித நீராட்டுவிழா, தண்ணீர் தெளித்து வீடு ,வியாபார ஸ்தலங்களை ஆசீர்வதித்தல்.துணி, கைக்குட்டை எண்ணை இவைகளை ஆசீர்வதித்து கொடுத்தல்.

தகுதியான கொண்டாட்டங்கள் மற்றும் களியாட்டங்களில் மறுபடி பிறந்த விசுவாசிகள் ஈடுபடும்போது அவைகளை விசுவாச அல்லது ஆராதனை முறைமையாக மாற்றாது அதை  சாதாரனமாக அனுசரிப்பதன் மூலம் தேவதுதர்களுக்கு செய்யும் ஆராதனையிலிருந்து தப்பிக் கொள்ளலாம்.(கொலோ  2:19, யாத் 34:14, 1இரா19:18 ஓசியா2:13…) ஞானஸ்னானம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் சுயமாக  இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய உடன்படிக்கையை விசுவாசித்து பிதாவோடு ஒப்புரவாகும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாகும் ஆவியானவர்தாமே முத்திரை இடுகிறார்.

அப்படியிருக்க குழந்தைகள்,சிறுவர்கள்,கிறிஸ்துவின் உடன்படிக்கையை புரியாதோர்,மற்றும் வேறு காரணங்களுக்காக ஞானஸ்னானம் எடுப்பதோ கொடுப்பதோ சத்தியத்திற்கு முற்றிலும் முரணாணவை.(1 பேதுரு – 3:21, 
கொலோ – 2:12, ரோமர் – 6:4, அப்போ 8:37,அப்போ– 2:41 மத்தேயு – 3:11,அப்